

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையிலான ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
விரைவில் இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான நிறுவனமான ரியல்மி இப்போது மலிவு விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்வது ரியல்மியின் வழக்கம். அந்த வகையில் இப்போது ரியல்மி 9i 5ஜி இந்திய சந்தையில் களம் கண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
லேசர் லைட் டிசைனை கொண்டுள்ளது இந்த போனின் பின்பக்க பேனல். மோட்டோ ஜி52, போக்கோ எம்4 புரோ 5ஜி, ரெட்மி நோட் 11டி 5ஜி போன்ற போன்களுடன் இது ஒப்பிட்டு பேசப்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 4ஜிபி வேரியண்ட் விலை ரூ.14,999-க்கும், 6ஜிபி வேரியண்ட் விலை ரூ.16,999-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையும் இதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.