தளம் புதிது: ஆவணப் படங்களைப் பார்த்து ரசிக்க!

தளம் புதிது: ஆவணப் படங்களைப் பார்த்து ரசிக்க!
Updated on
1 min read

இணையத்தில் ஆவணப் படங்களைப் பார்த்து ரசிக்க உதவும் இணையதளங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது ‘ராக்குமென்டரிஸ்’ இணையதளம்.

பி.பி.சி., சேனல் 4, நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப் மற்றும் விமியோ உள்ளிட்ட தளங்களில் இருந்து ஆவணப் படங்களைத் தேர்வு செய்து இந்தத் தளம் பட்டியலிடுகிறது. முகப்புப் பக்கத்திலேயே இந்தப் பட்டியலைப் பார்க்கலாம். அவற்றில் தேவையானதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

இப்போதைக்கு பிரிட்டனில் உள்ள ஆவணப் படங்களை மட்டுமே பட்டியலிடுவதாகவும், விரைவில் உலகம் முழுவதும் உள்ள ஆவணப் படங்கள் பட்டியலிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றில் சிலவற்றைப் பார்ப்பதில் காப்புரிமைச் சிக்கல்கள் இருக்கலாம்.

ஆனால் யூடியூப் போன்ற தளங்களிலிருந்து தேர்வு செய்யப்படவற்றை எளிதாகப் பார்க்கலாம். எப்படி இருந்தாலும் புதிய ஆவணப் படங்கள் பற்றித் தெரிந்துகொள்வதற்கான சிறந்த தளமாக இருக்கிறது. இமெயில் முகவரியைச் சமர்ப்பித்து உள்பெட்டியிலும் புதிய ஆவணப் படங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

இணையதள முகவரி: >http://rocumentaries.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in