

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற தலையணை இது. இந்த தலையணைக்குள் சிறிய அதிர்வு அலைகளை உருவாக்கும் உள்பட்டை இருக்கும். இதன் காரணமாக மன அழுத்தம் குறைந்து ஆழ்ந்த தூக்கம் உருவாகும். ஸ்மார்ட்போனை தலையணைக்குள் சொருகி பாடலையும் கேட்கலாம்.
*****
ஒன் ஸோல் பட்டை
பாதப்பிரச்சினை உள்ளவர்கள் ஷூ அணிவதற்கு சிரமப்படுவார்கள். அவர்களுக்காக ஒன் ஸோல் என்கிற பட்டையை உருவாக்கியுள்ளனர். இதை ஷூவின் உள்புறம் பொருத்திக் கொள்ள வேண்டும். மென்மையான, இலகுவான, துவைப்பதற்கு எளிதான வகையில் இந்த பட்டை உருவாக்கப்பட்டுள்ளது.