2021-22ல் இந்தியாவில் 747 இணையதளங்கள், 94 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய அரசு

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை  அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்
Updated on
1 min read

புதுடெல்லி: 2021 - 22ம் ஆண்டில் நாட்டின் நலனுக்கு எதிராக செல்பட்ட 747 இணையதளங்கள், 94 யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்ட யூடியூப் சேனல்களுக்கு எதிராக 2021-22-ல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள், 747 யூஆர்எல் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை தடைசெய்யப்பட்டன. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 69A-ன் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தவறான செய்திகளை பரப்புவது மற்றும் இணையதளத்தில் அவற்றை பிரச்சாரம் செய்வதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் முகமைகளுக்கு எதிராக அரசு வலுவான நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in