

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது ‘ஒப்போ பேட் ஏர் டேப்லெட்’ சாதனம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் சீன தேச நிறுவனங்களில் ஒன்று ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ பேட் ஏர் டேப்லெட், ரெனோ 8 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் என்கோ X2 ஏர் பட்டையும் அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஒப்போ பேட் ஏர் டேப்லெட் சாதனத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்று பார்ப்போம். கடந்த மே மாதம் சீனாவில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வந்திருந்தது. இப்போது இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது. வரும் 23-ஆம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.