இவ்வாண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி

இவ்வாண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி
Updated on
1 min read

புதுடெல்லி: நடப்பு ஆண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அ்ஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 5ஜி சேவைக்கான விலை உலக சராசரி விலையைவிடக் குறைவாகவே இருக்கும் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

5ஜி அலைக்கறைக்கான ஏலத்துக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஜூலை மாதம் இறுதியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு 73 ஜிகாஹெட்ஸ் அலைக்கறை ஏலம் விடப்படுகிறது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளன.

இந்நிலையில், 5ஜி தொடர்பான இந்தியாவின் முன்னெடுப்பு குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் ‘இந்தியா தொலைத் தொடர்புத் துறை சார்ந்த தொழில்நுட்பக் கட்டமைப்பில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில்தான் இன்டர்நெட் டேட்டா கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. மற்ற நாடுகளில் நம்மைவிட பல மடங்கு அதிக விலை உள்ளது. 5ஜி என்பது இந்திய தொலைத்தொடர்புத் துறையின் புதிய காலகட்டத்துக்கான தொடக்கமாக அமையும்’ என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in