வீடியோ புதிது: குவாண்டம் கணினி விளக்கம்

வீடியோ புதிது: குவாண்டம் கணினி விளக்கம்
Updated on
1 min read

இணைய உலகில் குவாண்டம் கணினி பற்றி அடிக்கடி பேசப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அடுத்த பெரிய தொழில்நுட்பமாக இது குறிப்பிடப்படுகிறது.

குவாண்டம் கணினிக்குப் பின்னே உள்ள நுட்பம் பற்றி அறிந்துகொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் 60 நொடி வீடியோவைப் பார்த்தால் போதும்.

குவாண்டம் கணினி பற்றி கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் தரும் வீடியோ இணைய உலகில் வைரலாகப் பரவிப் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உண்மையில் மிகவும் சிக்கலான‌ தொழில்நுட்பம் என்றாலும் அதைப் பிரதமர் எளிதாக விளக்கியிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குவாண்டம் கணினி துறை முதலீடு பற்றித் தெரிவித்தபோது ஒரு நிருபர், ‘குவாண்டம் கணினி என்றால் என்ன எனத் தெரியுமா?' என விளையாட்டாகக் கேட்டபோது பிரதமர் அளித்த‌ பதில்தான் இந்த வீடியோ!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in