Published : 18 May 2022 05:52 PM
Last Updated : 18 May 2022 05:52 PM

ரியல்மி நார்ஸோ 50 புரோ 5ஜி & 50 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் | விலை & சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்ஸோ 50 புரோ 5ஜி மற்றும் 50 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வருகிறது சீன தேச ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இப்போது நார்ஸோ 50 சீரிஸ் வரிசையில் இரண்டு போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களும் கேம்கள் விளையாடுவதற்கு ஏதுவான வகையில் சிறப்பான செயல்பாட்டை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத். நிச்சயமாக இதன் மூலம் கேமர்கள் திருப்தி அடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நார்ஸோ 50 புரோ 5ஜி சிறப்பு அம்சங்கள்:

  • 6.4 இன்ச் டிஸ்பிளே
  • மீடியாடெக் டைமன்சிட்டி 920 சிப்செட்
  • பின்பக்கத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது இந்த போன்
  • 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா இதில் இடம்பெற்றுள்ளது.
  • 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.
  • 5000mAh பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
  • 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
  • 5ஜி இணைப்பு வசதி
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது.

இதன் விலை 21,999 ரூபாய் முதல் தொடங்குகிறது. வரும் 26-ஆம் தேதி முதல் விற்பனை ஆரம்பமாக உள்ளது.

நார்ஸோ 50 5ஜி சிறப்பு அம்சங்கள்:

  • 6.6 இன்ச் டிஸ்பிளே
  • மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது இந்த போன்.
  • 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா இதில் இடம் பெற்றுள்ளது.
  • 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.
  • 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் வரும் 24-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விலை 15,999 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x