

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்ஸோ 50 புரோ 5ஜி மற்றும் 50 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வருகிறது சீன தேச ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இப்போது நார்ஸோ 50 சீரிஸ் வரிசையில் இரண்டு போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களும் கேம்கள் விளையாடுவதற்கு ஏதுவான வகையில் சிறப்பான செயல்பாட்டை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத். நிச்சயமாக இதன் மூலம் கேமர்கள் திருப்தி அடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நார்ஸோ 50 புரோ 5ஜி சிறப்பு அம்சங்கள்:
இதன் விலை 21,999 ரூபாய் முதல் தொடங்குகிறது. வரும் 26-ஆம் தேதி முதல் விற்பனை ஆரம்பமாக உள்ளது.
நார்ஸோ 50 5ஜி சிறப்பு அம்சங்கள்:
இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் வரும் 24-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விலை 15,999 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.