பட்ஜெட் விலையில் விவோ Y01 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள் & விலை

பட்ஜெட் விலையில் விவோ Y01 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள் & விலை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது விவோ Y01 ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சீன தேச ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Y01 ஸ்மார்ட்போன்.

விலை & சிறப்பு அம்சங்கள்

> 6.51 இன்ச் ஹெச்.டி+ ஹாலோ வியூ டிஸ்ப்ளே

> மீடியாடெக் ஹீலியோ P35 புராசஸர்

> 2ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

> 8 மெகாபிக்சல் பிரைமரி கேமரா. 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது ஃபிரன்ட் கேமரா.

> 5000mAh பேட்டரி. 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி.

> ஃபன்டச் ஓஎஸ் 11.1 அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனில் இந்த போன் இயங்குகிறது.

> இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

இந்த போனின் விலை 8,999 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. ஆன்லைன் மூலமாகவும், ரீடெயில் சந்தையிலும் வாடிக்கையாளர்கள் இந்த போனை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in