ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க 10 இணையப் பாதுகாப்பு டிப்ஸ்

ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க 10 இணையப் பாதுகாப்பு டிப்ஸ்
Updated on
2 min read

ஹேக்கர்களிடம் இருந்து இணையதள பயனர்கள் தங்களது மின்னஞ்சல், சமூக வலைதள கணக்குகள் வரை பாதுகாக்கும் 10 இணையப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் விரல்களின் நுனியில் வந்துவிட்டது. இதற்கு அடிப்படைக் காரணம், இணைய அணுகல் என சொல்லலாம். இணையப் பயன்பாடு எந்த அளவிற்கு அதன் பயனர்களுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்து வருகிறது என்பதை மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகிறது. மின்னஞ்சல் (இ-மெயில்) தொடங்கி சமூக வலைதள கணக்குகள் வரை அனைத்திற்கும் பாஸ்வேர்டு இருப்பதால் தகுந்த பாதுகாப்பு உள்ளது. இருந்தாலும் சமயங்களில் இணையப் பயனர்களின் சிறியதொரு கவனக் குறைவால் அவர்களது தனி நபர் விவரங்கள் தொடங்கி வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை ஹேக்கர்கள் சேகரிக்கும் அபாயம் உண்டு. அதன்மூலம் மோசடி வேலைகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம்.

எனவே, இணையதளத்தில் பாதுகாப்பான பயன்பாட்டுக்கான 10 வழிகள் குறித்து அறிந்துகொள்வோம். இதன்மூலம் ஆன்லைன் மோசடியிலிருந்து பாதிக்கப்படாமல் பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

தனிப்பட்ட தகவல்களில் கவனம்: தொழில்முறை பின்னணி தகவல்களை பெறவே பெரும்பாலான மக்கள் இன்று விரும்புவதாக சொல்லப்படுகிறது. அத்தகைய சூழலில் தனிப்பட்ட தகவல்களை பயனர்கள் இணைய வெளியில் பகிர வேண்டிய தேவைகள் இருக்காது. அதனால் தொழில்முறை பின்னணி சார்ந்த தகவல்களை மட்டும் பயனர்கள் கொடுத்தால் போதுமானது. அதே நேரத்தில் தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகளில் புரொஃபைல் விவரங்களை லிமிட் செய்வதும் அவசியம். இதன் மூலம் ஒரு பயனர் தனக்கு தெரிந்த நபர்களுடன் மட்டுமே அவரது தகவலை பகிர்ந்து கொள்ள முடியும்.

பிரைவசி செட்டிங்கில் புரொஃபைலை அப்டேட் செய்வது அவசியம்: தனிநபர்களின் சோஷியல் மீடியா கணக்குகள் மூலம் ஒருவரது ஆக்ட்டிவிட்டியை எளிதாக பிற பயனர்களால் டிராக் செய்துவிட முடியும். அதனால் பயனர்கள் தங்களது போஸ்ட்கள் மற்றும் பக்கங்களை யார் பார்க்கலாம் என்பது மாதிரியான பிரைவசி சார்ந்த விவரங்களை மாற்றுவதன் மூலம் ஹேக்கர்கள் மற்றும் மார்க்கெட்டிங் நபர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

வலைதளத்தின் நம்பகத்தன்மையை சோதிப்பது அவசியம்: பெரும்பாலும் அந்நியர்களிடம் பேசுவதை தவிர்க்கும்படி குழந்தைகளிடம் பெரியவர்கள் சொல்வார்கள். அது போல தான் வலைதளத்தின் நம்பகத்தன்மையை அறிந்து பயன்படுத்துவது அவசியம். வழக்கமாக பயன்படுத்தும் வலைத்தளங்களை யூஸ் செய்வது இங்கு அவசியம். புதிய வலைதளங்களை பயன்படுத்தும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். வாட்ஸ்அப் செயலியில் வரும் லிங்கை ஓப்பன் செய்தால், அதனை பயன்படுத்தி ஹேக்கர்கள் தங்களது கைவரிசையை காண்பித்து விடுவார்கள். அதனால் அதில் அலர்ட்டாக இருப்பது அவசியம்.

இணைய இணைப்பின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும்: இப்போது பெரும்பாலான இடங்களில் இலவச வை-ஃபை கனெக்‌ஷன் கிடைக்கிறது. அதை பயன்படுத்தும் பயனர்களின் போன்களில் உள்ள தகவல்களை வை-ஃபை இணைப்பை இலவசமாக கொடுக்கும் சர்வீஸ் வழங்குபவர்கள் சேகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதில் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள் போன்றவையும் சேகரிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதனால் மொபைல் டேட்டாவை பயன்படுத்துவதுதான் இதற்கான தீர்வாக இருக்கும்.

டவுன்லோடு செய்யும்போது கவனம்: இணையத்தில் கோப்புகள், படங்கள், வீடியோ என பல்வேறு விதமான டவுன்லோடுகளை பயனர்கள் மேற்கொள்வது வழக்கம். இது அவரவர் தேவைக்கு ஏற்ப மாறுபடும். அப்படி டவுன்லோடு செய்யும்போது அந்த ஃபைல்களில் கவனம் வைப்பது மிகவும் அவசியம். சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் ஃபைல்களை டவுன்லோடு செய்ய வேண்டாம்.

வலுவான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது அவசியம்: பாஸ்வேர்டு விஷயத்தில் அதிக கவனம் வைப்பது மிகவும் அவசியம். ஆங்கில எழுத்துகள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்களை பாஸ்வேர்டில் பயன்படுத்துவது மிகவும் அவசியம். மிகவும் எளிதாக மற்றும் யூகிக்கும் வகையிலான பாஸ்வேர்டுகளை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக 1234 மாதிரியான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் எளிதில் கிராக் செய்து விடுவார்கள். அதே போல பாஸ்வேர்டுகளை சுழற்சி முறையில் மாற்றுவதும் அவசியம்.

ஆன்லைன் ஷாப்பிங் தள பயன்பாட்டில் தேவை கவனம்: இப்போது ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. அப்படி பொருட்களை வாங்கும் போது வீட்டு விலாசம், வங்கிக் கணக்கு விவரம் மாதிரியானவற்றை பயனர்கள் கொடுக்கின்றனர். அதனை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் நம்பத்தகுந்த ஆன்லைன் தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் சொல்கின்றனர். அதே போல சமூக வலைதளங்களில் பயனர்கள் பகிரும் பதிவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆன்லைனில் ஒருமுறை பகிரப்படும் படங்களை திரும்பப் பெறுவது கடினம். அதனால் போஸ்ட்களை பகிரும் போது கவனம் தேவை.

அதே போல ஆன்லைனில் அறிமுகமாகும் நண்பர்கள் உடனும் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஹேக்கர்கள் சமயங்களில் மாற்று முறையில் வேறு பெயரில் தங்கள் வேலைகளை மேற்கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் அப்டேட் செய்யப்பட்ட சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர்களை பயன்படுத்துவது அவசியமாகிறது. ஏனெனில் நெட்வொர்க் மூலம் டெலிவராகும் இன்டர்நெட் மால்வேர்களை பயன்படுத்தி ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை எடுத்துவிடுவார்கள். அதனை தடுக்க இந்த சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர்கள் உதவுகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in