நோக்கியா G21 முதல் ரியல்மி GT 2 வரை | இந்தியாவில் அறிமுகமான 8 ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்

நோக்கியா G21 முதல் ரியல்மி GT 2 வரை | இந்தியாவில் அறிமுகமான 8 ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்
Updated on
3 min read

உலகளவில் இந்திய நாட்டை சார்ந்து இயங்கி வருகின்றன ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள். இந்திய நாட்டில் உள்ள சந்தை வாய்ப்புதான் அதற்கு காரணம். பட்ஜெட் ரக விலையிலான பொங்கல் தொடங்கி ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பத்து நாட்களில் இந்தியாவில் iQoo, ரியல்மி, ரெட்மி, நோக்கியா, மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் புதிய போன்களை அறிமுகம் செய்துள்ளன. சிறப்பு அம்சங்கள் இதோ...

iQoo Z6 Pro 5G: 6.44 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப், பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. 5ஜி இணைப்பு வசதி, டைப் சி சார்ஜிங் போர்ட், 4,700mAh பேட்டரி, 66 வாட்ஸ் பிளேஷ் சார்ஜ் சப்போர்ட், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியில் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை 23,999 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.

iQoo Z6 4G: டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்றவை iQoo Z6 Pro 5G போனில் இருப்பது தான். ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப், பின்பக்கத்தில் உள்ள மூன்று கேமராவில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரி, 44 வாட்ஸ் பிளேஷ் சார்ஜ் சப்போர்ட் மாதிரியானவை இந்த போனில் இடம் பெற்றுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியில் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை 14,499 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது.

மைக்ரோமேக்ஸ் IN 2c: 6.52 இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், யுனிசோக் T610 சிப், 3ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி ஆகியன உள்ளது. பின்பக்கத்தில் இரண்டு கேமராவும் இடம் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் உள்ளது. 5000 mAh பேட்டரி, 4ஜி இணைப்பு வசதி, டைப் சி சார்ஜிங் போர்ட், 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் உள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதன் விலை 8,499 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அறிமுக சலுகையாக 1000 ரூபாய் வரை விலையில் தள்ளுபடி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

நோக்கியா G21: 6.5 இன்ச் டிஸ்பிளே, யுனிசோக் T606 சிப், 5050 mAh பேட்டரி, 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி, பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு விதமான வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. 4ஜிபி போன் 12,999 ரூபாய்க்கும், 6ஜிபி போன் 14,999 ரூபாய்க்கும் கிடைக்கும் என தெரிகிறது. இந்த போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50A பிரைம்: ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன். 6.6 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா-கோர் யூனிசோக் T612 சிப், பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல், கொண்டுள்ளது பிரைமரி கேமரா. AI சென்சார் வசதியுடன் கூடிய 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது. 4ஜி இணைப்பு வசதி, டைப் சி சார்ஜிங் போர்ட், 5000 mAh பேட்டரி, 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் 11,499 ரூபாய்க்கும், 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 12,499 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி GT 2: 6.62 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 888 சிங்கிள் சிப், 5000mAh பேட்டரி, 65 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி, டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகா பிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது. இந்தியாவில் இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனும் கிடைக்கிறது.

ரெட்மி 10 பவர்: ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6.7 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிங்கிள் சிப், பின்பக்கத்தில் டியூயல் கேமரா. அதில் 50 மெகா பிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 5 மெகா பிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி, டைப் சி சார்ஜிங் போர்ட், 6000 mAh திறன் கொண்ட பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இருந்தாலும் போன் பாக்ஸுடன் 10 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் மட்டுமே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4ஜி இணைப்பு வசதி மாதிரியானவை இதில் உள்ளது.

இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.14,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாம். இருந்தாலும் இந்தியாவில் இதன் விற்பனை எப்போது தொடங்கும் என்ற விவரத்தை ரெட்மி அறிவிக்கவில்லை.

ரியல்மி GT நியோ 3: 6.7 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், ட்யூயல் சிம் சப்போர்ட், பின்பக்கத்தில் மூன்று கேமரா போன்றவை உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது. 5ஜி இணைப்பு வசதி, டைப் சி சார்ஜிங் போர்ட் இதில் உள்ளது.

முக்கியமாக இந்த போன் இரண்டு பேட்டரி மற்றும் இரண்டு விதமான சார்ஜிங் சப்போர்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது 4500mAh திறன் கொண்ட பேட்டரியில் 150 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும், 5000mAh திறன் கொண்ட பேட்டரியில் 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உள்ளது. பேட்டரி திறன் மற்றும் ஸ்டோரேஜ் வசதிக்கு ஏற்ற வகையில் போனின் விலை மாறுபடுகிறது.

80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உடன் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ள போனின் விலை 36,999 ரூபாய். 80 வாட்ஸ், 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ள போனின் விலை 38,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட போனின் விலை 42,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 4-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனை தொடங்க உள்ளது. அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 50 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட போனை 5 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் செய்து விடலாம் என ரியல்மி தெரிவித்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in