

வீடியோக்களில் அதிலும் பாடம் நடத்தும் வீடியோக்களில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் புக்மார்க் செய்துகொள்ள வேண்டிய யூடியூப் சேனல் மினிட் எர்த்.
நாம் வசிக்கும் பூமி சார்ந்த பல அடிப்படை விஷயங்களை எளிதாக விளக்கும் வீடியோக்களை வழங்கும் சேன இது. எல்லாமே விஞ்ஞான பூர்வமாக விளக்கம் அளிக்கும் வீடியோக்கள் என்றாலும், அலுப்போ, அயர்ச்சியோ தராமல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்கள்.
உதாரணத்துக்கு நதிகளின் போக்கை விளக்கும் வீடியோவையே எடுத்துக்கொள்வோம். நதிகள் வளைந்து நெளிந்து செல்வதை நாம் பலமுறை கவனித்திருக்கிறோம். மலை உச்சியிலிருந்து உற்பத்தியாகும் நதிகள் சமவெளியில் பாய்ந்து செல்லும்போது நேராகச் செல்லாமல் வளைந்து செல்வது ஏன்?
சமவெளியில் பாயும் நதிகளின் திசை மாற, கொஞ்சம் இடைஞ்சல்களும் கால அவகாசமும் தேவை; இந்த இரண்டுமே அதிகம் இருக்கின்றன என்கிறது இந்த வீடியோ.
கரையோரப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் எப்படி நதியின் பாதையை மாற்றி, தொடர்ந்து வளைய வைக்கின்றன என்பதை அனிமேஷன் வடிவில் பார்க்கும்போது சுவாரஸ்யமாகவே இருப்பதை உணரலாம்.
நிமிட வாசிப்பு போல சில நிமிடப் பார்வையில் அடிப்படைக் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ள உதவும் சேனல் இது.
வீடியோவைக்காண: >https://www.youtube.com/watch?v=8a3r-cG8Wic