தளம் புதிது: ஒளிப்படத் திருத்தச் சேவை

தளம் புதிது: ஒளிப்படத் திருத்தச் சேவை
Updated on
1 min read

ஸ்மார்ட்போன், ஒளிப்படக் கலையை எளிதாகியிருக்கிறது. ஆனால் ஒளிப்படங்களை எடுத்தால் மட்டும் போதுமா? அவற்றைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வதாக இருந்தாலும் சரி அல்லது டிஜிட்டல் ஒளிப்பட ஆல்பமாக மாற்றுவதாக இருந்தாலும் சரி, ஒளிப்படங்களின் அளவை மாற்றும் அவசியம் ஏற்படலாம்.

இப்படி ஒளிப்படங்களைத் திருத்தும் சேவையை ஆன்லைனிலேயே வழங்கும் இணையதளங்களும் இருக்கின்றன. இந்த வகை தளங்களில் ‘பல்க் ரீசைஸ் போட்டோஸ்' எனும் தளம் மிகவும் எளிதாக இருக்கிறது.

எந்த ஒளிப்படங்களைத் திருத்தி மேம்படுத்த வேண்டுமோ அவற்றை அப்படியே டெஸ்க்டாப்பிலிருந்து இழுத்து வந்து, இதன் முகப்புப் பக்கத்தில் உள்ள கட்டத்தில் வைத்துவிட்டால் போதும், அவற்றை அழகாக மாற்றித் தருகிறது. நீளம், அகலம், உயரம் உட்பட ஐந்து விதமாகப் படங்களை மாற்றிக்கொள்ளலாம்.

இந்தத் தளத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒளிப்படங்களை மொத்தமாக இதில் திருத்திக்கொள்ளலாம் என்பதுதான். இதற்காக எதையும் தரவிறக்கமோ அல்லது இன்ஸ்டால் செய்துகொள்ளும் அவசியமோ இல்லை என்கிறது இந்தத் தளம்.

இணைய முகவரி:>http://bulkresizephotos.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in