ரெட்மி 10A டு மோட்டோ ஜி22: இந்தியாவில் புதிதாக அணிவகுக்கும் ஸ்மார்ட்போன்கள் | சிறப்பு அம்சங்கள்

ரெட்மி 10A டு மோட்டோ ஜி22: இந்தியாவில் புதிதாக அணிவகுக்கும் ஸ்மார்ட்போன்கள் | சிறப்பு அம்சங்கள்
Updated on
3 min read

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இம்மாதம் அறிமுகமாகும் மற்றும் விற்பனையைத் தொடங்கும் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம். குறிப்பாக Redmi 10A, இன்பினிக்ஸ் ஹாட் 11 2022, ஒப்போ F21 புரோ சீரிஸ், மோட்டோ ஜி22, சாம்சங் கேலக்ஸி A33 5ஜி, ரியல்மி 9 4ஜி, ரியல்மி C31 ஆகியவை குறித்துதான் பார்க்கப்போகிறோம்.

இன்றைய டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாத சாதனமாகிவிட்டது ஸ்மார்ட்போன். சாம்சங், ஆப்பிள், ஜியோமி, விவோ, ஒப்போ, ரியல்மி, போக்கோ என ஒவ்வொரு நிறுவனமும் புதுப்புது அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து கொண்டே வருகின்றன. இந்த அப்டேட்கள் அனைத்தும் காலத்தின் கட்டாயம். வங்கிக்கும், ஏடிஎம்மிற்கும் செல்லாமல் அவரவர் இருந்த இடத்தில் இருந்தபடி ஸ்மார்ட்டாக பணம் அனுப்பவும், பெறவும் உதவுகிறது ஸ்மார்ட்போன்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான போன்களில் இப்படிப்பட்ட வசதிகள் இருந்ததில்லை. புயல் வேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட்போன்களும் அப்டேட் செய்து கொள்வது அதன் சர்வைவலுக்காக தான்.

Redmi 10A: ரெட்மி 10A (Redmi 10A) ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 புராசஸர், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 5000 mAh பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், 4ஜி இணைப்பு வசதி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த போன் மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி இதில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்தியாவில் ரெட்மி 10 போனின் இரண்டு வேரியண்டுகள் ரூ.10,999 மற்றும் ரூ.12,999 என விற்பனையாகி வருகின்றன. ரெட்மி 10A போன் இந்த விலையைக் காட்டிலும் குறைவாக இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ம் தேதி இந்த போன் அறிமுகமாகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 2022: 6.7 இன்ச் டிஸ்பிளே, யுனிசாக் டி610 புராசஸர், 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், பின்பக்கத்தில் இரண்டு கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், டைப் சி போர்ட், 4ஜி இணைப்பு வசதி மாதிரியானவை இதில் உள்ளது.

வரும் 22-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது இந்த போன். மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 8,999 ரூபாய். பிளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த போன் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ F21 புரோ சீரிஸ்: ஒப்போ நிறுவனம் இந்தியாவில் இன்று அதன் ‘F’ சீரிஸ் போன் வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. F21 புரோ 5ஜி மற்றும் 4ஜி போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

F21 புரோ 5ஜி போனில் 6.43 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 புராஸசர், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ். 4500mAh பேட்டரி, 33 வாட்ஸ் சார்ஜிங் வசதி, டைப் ‘சி’ போர்ட், பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் AI அம்சத்தை கொண்டுள்ளது 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்பக்கத்தில் எல்.இ.டி நோட்டிபிகேஷன் அலர்ட் மாதிரியான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. 5ஜி போனின் விலை 26,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அசல் விலையில் இருந்து 15 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்ட விலை என தெரிகிறது.

5ஜி போனுடன் ஒப்பிடுகையில் F21 புரோ 4ஜி போனில் புராஸசர் மட்டுமே வேறுபடுகிறது. இந்த போன் ஸ்னாப்டிராகன் 680 புராஸசரை கொண்டுள்ளது. இதன் விலை 22,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த போன்களுக்கு முன்பதிவு தொடங்கியது. ஒப்போ நிறுவனத்தின் வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

மோட்டோ ஜி22: 6.5 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 புராசஸர், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்பக்கத்தில் நான்கு கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா. 5000mAh பேட்டரி, 20 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட், 4ஜி இணைப்பு, டைப் ‘சி’ சார்ஜிங் போர்ட், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி முதலியவை இடம் பெற்றுள்ளது. சந்தையில் ரூ.10,999-க்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A33 5ஜி: ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 6.4 இன்ச் டிஸ்பிளே, ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 சிங்கிள் சிப், 6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு ரேம் வேரியண்ட், பின்பக்கத்தில் நான்கு கேமரா. அதில் பிரதான கேமரா 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. டைப் சி சார்ஜிங் போர்ட், 13 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இதில் உள்ளது.

ரியல்மி 9 4ஜி: ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராஸசர், 6ஜிபி மற்றும் 8ஜிபி என இருவேறு ஸ்டோரேஜ் வேரியன்ட், 5000mAh பேட்டரி, பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 108 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.

4ஜி இணைப்பு வசதி, டைப் ‘சி’ சார்ஜிங் போர்ட் மற்றும் 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இந்தியாவில் விற்பனைய ஆரம்பமாகியுள்ளது. 6ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போன் 17,999 ரூபாய்க்கும், 8ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போன் 18,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரியல்மி C31: 6.5 இன்ச் ஹெச்.டி+எல்.சி.டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் யூனிசாக் டி612 புராசஸர், 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்டுகளில் கிடைக்கிறது இந்த போன். ஆண்ட்ராய்டு 11-இல் இயங்கும் இந்த போனின் பின்பக்கத்தில் மூன்று கேமரா உள்ளன. அதில் பிரதான கேமரா 13 மெகாபிக்சலை கொண்டுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரி, 4ஜி இணைப்பு வசதியும் இதில் உள்ளது.

இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 3ஜிபி வேரியண்ட் போனின் விலை ரூ.8,999. 4ஜிபி வேரியண்ட் போனின் விலை ரூ.9,999. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாம்சங் M33 5ஜி: ஆக்டா-கோர் எக்ஸினோஸ் புராசஸர், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வகையான ஸ்டோரேஜ் வேரியண்ட், 6000mAh பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், பின்பக்கத்தில் நான்கு கேமரா, கொரில்லா கிளாஸ் என சிறப்பம்சங்களில் அசத்துகிறது இந்த போன்.

இதில் 6ஜிபி ரேம் வேரியண்ட் 18,999 ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் வேரியண்ட் போனின் விலை 20,499 ரூபாயாக உள்ளது. கடந்த 8ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in