வீடியோ புதிது: 100 ஆண்டுகள் 100 திரைப்படங்கள்

Updated on
1 min read

திரைத்துறையின் 100 ஆண்டுகளை சுவாரஸ்யமான முறையில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஜேகப் ஸ்வின்னி எனும் இணையவாசி. திரைப்பட ஆர்வலர், எடிட்டர், இயக்குந‌ர் எனப் பல முகங்கள் கொண்ட‌ ஸ்வின்னி தனது 'விமியோ' சேனலில் (யூடியூப் போன்ற வீடியோ பகிர்வுச் சேவை) புதிய வீடியோ தொகுப்பு ஒன்றைப் பதிவேற்றி இருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் திரைப்பட உலகின் 100 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு திரைப்படத்தைத் தேர்வு செய்து ஒவ்வொரு படத்தில் இருந்தும் சிறந்த காட்சியை வீடியோவாக தைத்திருக்கிறார். ஹாலிவுட் படங்களின் ஆதிக்கம் இருந்தாலும் ஒற்றை வீடியோவில் 100 ஆண்டு படங்களைப் பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும்.

வீடியோவை காண: >https://vimeo.com/162855085

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in