ரோபோ துறவி

ரோபோ துறவி
Updated on
1 min read

புத்த மதத்தினரை கவரும் வகையில் ரோபோ புத்த துறவி உருவாக்கப்பட்டுள்ளது. 60 செமீ உயரமுள்ள இந்த ரோபோ பாரம்பரியம் மாறாமல் புத்த மத கருத்துகளையும், புத்தமதம் பற்றிய கேள்விகளுக்கும் விடை அளிக்கும்.

கிளை வடிவ விளக்கு

மரக் கிளை போல இந்த விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 சிறிய பல்புகள் இதில் பொருத்தலாம். அதிக பல்புகள் பொருத்துவதால் அறைக்குள் ரம்மியமான வெளிச்சம் கிடைக்கும். அலங்கார விளக்காக இதைப் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் டேபிள்

மடிக்கணினி போல டெஸ்க்டாப் கணினியை இலகுவாக பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த ஸ்மார்ட் டேபிள் அந்த குறையைப் போக்குகிறது. இந்த டேபிளின் உயரத்தை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும், எளிதாக வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in