செயலி புதிது: கூகுள் காலண்டரில் புதிய வசதி

செயலி புதிது: கூகுள் காலண்டரில் புதிய வசதி
Updated on
1 min read

கூகுள் காலண்டர் செயலியைப் பயன்படுத்த மேலும் ஒரு வலுவான காரணம் கிடைத்துள்ளது. இந்தச் செயலிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலக்குகள் வசதிதான் அது.

'கோல்ஸ்' எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி மூலம் பயனாளிகள் தங்கள் சின்னச் சின்ன இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஊக்கம் பெறலாம்.

வாரம் ஒரு புத்தகம் படிப்பது, தினமும் 15 நிமிடம் நடக்க வேண்டும் என்பது போல நாம் அடைய விரும்பும் இலக்கு எதுவாக இருந்தாலும் அதற்காக இந்த வசதியை நாடலாம். மனதில் உள்ள இலக்கை, கூகுள் கால‌ண்டர் செயலியில் சமர்ப்பித்தால் போதுமானது. அதன் பிறகு நம்முடைய நாட்காட்டியில் எந்த நேரம் வெறுமையாக இருக்கிறது எனக் கண்டறிந்து அந்த நேரத்தை இது தானாகப் பரிந்துரைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: >http://bit.ly/1diNjaH

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in