தளம் புதிது: நீங்களும் டிக்டேட் செய்யலாம்

தளம் புதிது: நீங்களும் டிக்டேட் செய்யலாம்
Updated on
1 min read

இமெயில் அனுப்ப அல்லது நீண்ட கட்டுரையை டைப் செய்ய குரல் மூலமே ‘டிக்டேட்’ செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்? ‘டிக்டேஷன்.இயோ’ இணையதளம் இந்த மாயத்தைச் சாத்தியமாக்குகிறது. ‘ஸ்பீச் ரெகக்னிஷன்’ என்று சொல்லப்படும் பேச்சு உணர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்தத் தளத்தில் நீங்கள் டைப் செய்ய விரும்பும் விஷயத்தை டிக்டேட் செய்து சேமித்துக்கொள்ளலாம். இந்த வசதியை உங்கள் இணையதளத்திலும் இணைத்துக்கொள்ளலாம்.

‘கூகுள் குரோம்’ பிரவுசரில் உள்ள பேச்சு உணர் நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே குரோம் பிரவுசரில்தான் இதைப் பயன்படுத்தலாம். மற்ற பிரவுசர்கள் என்றால் குறிப்பேடு போல இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆங்கிலம் தவிர பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்தலாம். இந்திய மொழிகளில் இந்தியில் பயன்படுத்தும் வசதி மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது.

டிஜிட்டல் இன்ஸ்பிரேஷன் வலைப்பதிவை நடத்தி வரும் அமீத் அகர்வால்தான் இந்தச் சேவையை உருவாக்கி இருக்கிறார். தமிழிலும் இந்த வசதி வேண்டும், கொஞ்சம் கவனிங்க அமீத்!

இணையதள முகவரி: >https://dictation.io/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in