பொருள் புதுசு: ஸ்மார்ட் விளக்கு

பொருள் புதுசு: ஸ்மார்ட் விளக்கு
Updated on
2 min read

ஸ்மார்ட் விளக்கு

நமக்குத் தேவையான வெளிச்சத்துக்கு ஏற்ப இந்த விளக்கை இயக்கலாம். இந்த விளக்கை ஸ்மார்ட்போனோடு இணைத்துக் கொண்டால், அதிக வெளிச்சம், குறைந்த வெளிச்சம் என நமது தேவைக்கு ஏற்ப இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் பார்க்கிங்

வீட்டில் சைக்கிளை நிறுத்த இடம் இல்லை என்று இனிமேல் சொல்லத் தேவையில்லை. இந்த கருவியை வீட்டு சுவற்றில் பொருத்திவிட்டால் சைக்கிளை அதன் மீது தூக்கி வைத்துவிடலாம். சைக்கிளின் எடையை தாங்கும் அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் 3டி பிரிண்டர்

இந்த 3டி பிரிண்டரின் எடை 780 கிராம்தான். இதை எந்த ஸ்மார்ட்போன் கொண்டும் இயக்க முடியும். ஓலோ என்ற ரெசின் பொருள் இந்த பிரிண்டரில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வண்ணங்களிலும் பிரிண்ட் எடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

சிறிய ஹெட்போன்

போன் பேசும் போதோ அல்லது பாடல் கேட்கும் போதோ புறச் சத்தங்களால் நமக்கு தெளிவாக கேட்காது. இதை தடுப்பதற்காக நாய்ஸ் டெக்னாலஜி என்ற புதிய தொழில் நுட்பத்தை கொண்டு இந்த இயர் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் சரியாக பொருந்துமாறு பல்வேறு அளவுகளில் இது வடிவமைக்கப் பட்டுள்ளன. சார்ஜ் ஏற்றிக் கொள்வதற்கு என்று தனியாக ஒரு கருவியை வடிவமைத் துள்ளனர். ஒருதரம் சார்ஜ் ஏற்றிக் கொண்டால் 110 மணி நேரம் இயங்கக்கூடிய திறன் கொண்டது.

வேக கட்டுப்பாட்டு கருவி

நாம் காரில் செல்லும் போது எந்த பகுதியில் என்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்பது பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை. விபத்துகள் அதிகம் நடப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கருவி அந்தந்த பகுதியில் செல்லவேண்டிய வேகத்தை விட கூடுதலாக சென்றால் அலாரம் மூலம் நமக்கு தகவல் தெரிவிக்கிறது. அதாவது பள்ளிக்கூட இடங்கள், மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடங்களில் செல்லவேண்டிய வேகத்தை மீறினால் நமக்கு தகவல் தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in