

பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் போன்களை மக்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஏனென்றால், அது அவர்களை உணர்வுபூர்வமாக திருப்திப்படுத்துவதால்தான்!
தொலைத்தொடர்பு தேவைகளுக்காகவும், பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் மக்கள் பெரிய திரைக்கொண்டவற்றை தேர்ந்தெடுப்பது அவர்களை உணர்வப்பூர்வமாக திருப்திபடுத்துவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இதுகுறித்து பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷ்யாம் சுந்தர் கூறுகையில், “பெரிய திரைக்கொண்ட ஸ்மார்ட் போன்களை மக்கள் வாங்க முன்வருவதற்கான காரணங்கள் பெரும்பாலும் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகவே இருப்பதாக எங்கள் கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது," என்று தெரிவித்தார்.
அடிப்படையில், இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று எளிதாக பயன்படுத்தக்கூடியது, மற்றொன்று உணர்வுப்பூர்வமாக திருப்தியடைவது.
“ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில் பலவிதமான பயன்கள் உண்டு. ஆனால், கண்கவரும் பெரிய திரைக்கொண்ட ஸ்மார்ட் போன்களைப் பயன்படுவது பயனீட்டாளர்கள் மிகுந்த திருப்தியடைவதுதான் இதன் சிறப்பு,” என்று கூறுகிறார் பேராசிரியர் சுந்தர்.
சந்தையில் தற்போதுள்ள ஸ்மார்ட் போன்களின் திரையளவு பெரிதுப்படுத்தி இருக்கிறார்கள்.
“முன்பிருந்த ஸ்மார்ட் போன்களைவிட தொலைக்காட்சி, திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவான பெரிய திரைக்கொண்ட போன்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று கூறுகிறார் சுந்தர்.
இந்த ஆய்வின்போது, 130 பல்கலைகழக மாணவர்வகளிடம் இரு வெவ்வேறு அளவுடைய ஸ்மார்ட் போன்களை கொடுத்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.
பெரிய திரைக்கொண்ட தொலைக்காட்சிகளும் கம்பியூட்டர் திரைகளும் பயனீட்டாளர்கள் மத்தியில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இது கைப்பேசிகளுக்கும் பொருந்தும் என்று எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது,” என்று கொரியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கி ஜூன் கிம் கூறுகிறார்.