அடாப்டரின் துணையில்லாமல் சார்ஜ் செய்யலாம்

அடாப்டரின் துணையில்லாமல் சார்ஜ் செய்யலாம்
Updated on
1 min read

அடாப்டரின் தேவையின்றி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகளின் மின்சார சக்தியை நிரப்ப 4 USB போர்ட்டுகளுடன் கூடிய பவர் ஸ்ட்ரிப்பை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

ZEB-TS102 மற்றும் ZEB-TS202 என்ற இந்த புதிய பவர் ஸ்ட்ரிப்புகள் மின் இணைப்புக்காக பல போர்ட்டுகள் மற்றும் 4 USB போர்ட்டுகளுடன் வருகின்றன. இந்த USB போர்ட்டுகள் மொபைல் போன்கள்மற்றும் டேப்லட்டுகளை அடாப்டரின் உதவியின்றி சார்ஜ் செய்ய உதவுகின்றன.

மேலும் இதில் இருக்கும்“பவர் கிரிப்” சாக்கெட்டுகள் தளர்வான இணைப்பு என்ற சிக்கலை தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தீப்பிடிக்கும் ஆபத்தையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதன் எக்ஸ்டென்ஷன் கேபிளின் நீளம் 2 மீட்டர்கள் ஆகும். இந்த பவர் ஸ்ட்ரிப்புகள் தனித்தனி LED விளக்குகள் மற்றும் பவர் சாக்கெட்டுகள் மற்றும் USB போர்ட்டுகளுக்காக பவர் ஸ்விட்சுடன் வருகின்றன.

ZEB-TS102 ல் பவருக்காக 6 போர்ட்டுகளும் ZEB-TS202 ல் 4 போர்ட்டுகளும் உள்ளன. பாதுகாப்பிற்காக இந்த இரண்டு மாடல்களிலும் ஓவர்லோடு பாதுகாப்பு இருக்கிறது.

இரண்டு பவர் ஸ்ட்ரிப்புகளும் 1 வருட வாரண்டியுடன் வருகின்றன. ZEB-TS202 ன் விலை ரூபாய் 1249/- மற்றும் ZEB-TS102 ன் விலை ரூபாய்1349/-.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in