

‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் என்றதுமே அதில் வரும் ராட்சத டைனோ சர்கள்தான் நினைவுக்கு வரும். எப்போதாவது, ஜுராசிக் பார்க் படத்தில் டைனோசர்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்ததுண்டா?
வில்லியம் ஹிர்ஷ் என்பவர் உருவாக்கி யூடியூப்பில் பதிவேற்றியுள்ள வீடியோ இந்தக் கேள்வியைக் கேட்க வைத்து அதற்கான பதிலையும் அளிக்கிறது. டைனோசர் இல்லாமல் ஜுராசிக் பார்க்கைப் பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோவைப் பார்க்கும்போது உணரலாம்.
வீடியோவை உருவாக்கியது பற்றிய ஒரு வீடியோவையும் உடன் இடம்பெற வைத்திருக்கிறார் வில்லியம்.
</p>