ஸ்மார்ட் தெர்மாமீட்டர்

ஸ்மார்ட் தெர்மாமீட்டர்
Updated on
1 min read

இந்த மிகச் சிறிய வடிவிலான தெர்மாமீட்டரை புளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ளவேண்டும். வெப்பத்தை அறிய உடலின் அருகில் வைக்கும் பொழுது மிகவும் வெப்பமாக இருந்தால் சிவப்பு நிறத்திலும், உடலின் வெப்பம் சமநிலையில் இருந்தால் பச்சை நிறத்திலும், வெப்பம் குறைவாக இருந்தால் வெள்ளை நிறத்திலும் எல்இடி விளக்கு எரிகிறது. எவ்வளவு வெப்பம் என்பதை ஸ்மார்ட்போனில் பார்த்துக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மைட்டி செயலி

பொதுவாக செல்போனுடன் நமது இயர் போனை இணைத்து பாட்டுக் கேட்கும் பொழுது பாட்டை மாற்றுவதற்கு ஒவ்வொரு தடவையும் செல்போனை எடுத்துதான் மாற்ற வேண்டும். ஆனால் இந்த மைட்டி என்ற சிறிய கருவியை வை-பை மூலமாக செல்போனுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் எந்தப் பாட்டை வேண்டுமென்றாலும் கேட்கலாம். மேலும் இதை 45 நிமிடம் சார்ஜ் செய்துக் கொண்டாலே போதும் நீண்ட நேரம் இயங்கும் திறன் கொண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in