Last Updated : 04 Mar, 2016 11:42 AM

 

Published : 04 Mar 2016 11:42 AM
Last Updated : 04 Mar 2016 11:42 AM

கண் கவர் லோகோக்கள்

எளிமைக்கு எப்போதுமே தனி அழகுதான். பிரான்ஸைச் சேர்ந்த 'டிஃபெரன்ட்லி' ஸ்டூடியோ உருவாக்கும் லோகோக்கள் இப்படித்தான் எளிமையாக, அழகாக இருக்கின்றன. இந்த ஸ்டூடியோ உருவாக்கும் படைப்புகளை இரண்டாவது முறையாக அடையாளம் காட்டுவதாகக் கூறி 'டிசைன் டாக்ஸி' இணையதளம் சமீபத்தில் இதன் புதிய லோகோக்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த லோக்கோக்கள் எல்லாமே விலங்குகள் சார்ந்தவை. எல்லாமே கோட்டுச் சித்திரமாக எளிமையாக வரையப்பட்டவை என்பது மட்டும் அல்ல. ஒற்றைக் கோட்டில் வரையப்பட்டவை என்பதுதான் விஷேசம். வாத்து, நரி, யானை எனப் பல விலங்குகளைக் கச்சிதமாக ஒற்றைக் கோட்டில் கோட்டுச் சித்திரமாக உருவாக்கி வியக்க வைத்துள்ளனர். ஏற்கெனவே இப்படி வீட்டு உபயோகப் பொருட்களையும் ஒற்றைக் கோட்டு மூலம் அழகிய லோகோவாக உருவாக்கியிருக்கிறது இந்நிறுவனம். வடிவமைப்பிலும், அழகியலிலும் ஆர்வம் கொண்டவர்கள் இந்த லோகோக்களைப் பார்த்தால் நிச்சயம் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு: >http://designtaxi.com/news/384589/Clever-Illustrated-Animal-Logos-Drawn-With-A-Single-Line/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x