

இமெயில் நாகரிகம், செல்போன் நாகரிகம் பற்றி எல்லாம் ஒரு காலத்தில் பிரபலமாகப் பேசப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இமெயில் மற்றும் செல்போன் பயன்பாட்டில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய விதிகள் இவ்வாறு நினைவுபடுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாகப் பொதுவெளியில் இவற்றைக் கடைப்பிடிப்பது முக்கியம் எனக் கருதப்பட்டது. இவை பழைய சங்கதி என ஆகிவிட்டாலும் அடிப்படையானவை என்பதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், இன்றைய தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் வருங்காலத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய பொது விதிகளை ‘எட்டிக்.இயோ’ தளம் பரிந்துரைக்கிறது.
நகைச்சுவை மிளிர, பொருத்தமான கார்ட்டூன் சித்திரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. படித்து விட்டு ரசிக்கவும் செய்யலாம். சிந்திக்கவும் செய்யலாம். ஸ்மார்ட் போன் முதல் ட்ரோன்கள் வரை பல வித தொழில்நுட்பங்கள் வரையான ஆலோசனைகள் உள்ளன. ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக் குறிப்புகள் ஆகச் சிறந்தவையாக இருக்கின்றன.
விவரங்களுக்கு: >http://etiquette.io/