

சார்லஸ் பம்பார்டியர் (Charles Bombardier) என்கிற தொழில்துறை வடிவமைப்பாளர் புதிய விமான வடிவமைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விமானத்திற்கு ஆண்டிபொட் என்று பெயரும் வைத்துள்ளார். தற்போது அதிவேக விமானமாக விளங்கும் கான்கார்டு சூப்பர்சானிக் விமானங்களை விட 12 மடங்கு அதிக வேகம் கொண்டதாக ஆண்டிபொட் விமானம் இருக்குமாம். 5500 கிமீ தூரமான, நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 11 நிமிடங்களில் அடைந்துவிடலாம். ஸ்கிராம்ஜெட் இன்ஜினுடன், இதன் இறக்கைகளில் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
பாலைவன வீடு
அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லைக்கு அருகில் பாலைவனப்பகுதியில் தொடங்கப்பட்டது சிஐடிஇ (Center for Innovation, Testing and Evaluation) என்கிற நகரத் திட்டம். இந்த பாலைவனப் பகுதியில்தான் முதல் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அதிலிருந்து கைவிடப்பட்ட பகுதியாக இருந்த இந்த பாலைவனத்தில் 2011ல் சிஐடிஇ திட்டத்தை அறிவித்தது பிகாசஸ் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம். ரூபாய் 6000 கோடி மதிப்பில் 35,000 பேர் வசிக்கும் அளவுக்கு சர்வதேச மாதிரி நகரமாக உருவாக்க திட்டமிட்டிருக்கின்றனர்.
காகித கார்
ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான லெக்ஸஸ், தங்களது நாட்டின் புகழ்பெற்ற காகித கலையான ஓரிகாமி அடிப்படையில் செடான் ரக காரை 1,700 அட்டைகளைக் கொண்டு தாயாரித்து காட்சிப்படுத்தியுள்ளது.
3டி புகைப்படம்
ஒரு பொருளை 360 டிகிரி புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் நம் கையால் திருப்பி வைத்து வைத்துதான் எடுக்க முடியும். ஆனால் இந்த போல்டியோ 360யின் மீது பொருளை வைத்து விட்டால் தானாகவே 360 டிகிரி சுழன்று புகைப்படம் எடுத்துக் கொடுக்கும்.
மெழுகுவர்த்தி எல்இடி
எல்இடி விளக்குகள் பேட்டரி அல்லது மின்சாரம் மூலம் எரியக்கூடியதாக இருக்கும். ஆனால் லுமிர் சி என்ற எல்இடி, மெழுகுவர்த்தி மூலம் எரிகிறது. மெழுகுவர்த்தியை இதற்கான கருவியில் கீழ்புறம் ஏற்றியதும், மேல் பகுதியில் எல்இடி எரியும்.