பெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்

பெண்களின் மனநிலையை பாதிக்கும் இன்ஸ்டாகிராம்
Updated on
1 min read

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் இளம்பெண்களின் மனநிலையை பாதிப்பதாக ஃபேஸ்புக் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறைகளிடத்தில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இதைப் பயன்படுத்துபவர்களில் 40%க்கும் மேலானோர் 20 வயதுக்குக் குறைவானவர்கள்.

இந்த நிலையில் சமீபத்தில், ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள்தான் தற்போது இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்த கேள்வியை அதிகரித்துள்ளது.

அதாவது, இன்ஸ்டாகிராம் இளம்பெண்கள் தங்களின் உடல், அழகு, தோற்றம் குறித்து அதிகம் கவலைப்படுவதாக அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்கள் ஏற்கெனவே தங்கள் உடல், அழகு, தோற்றம் குறித்த வருத்தத்தில் இருக்கும்போது, இன்ஸ்டாகிராம் பயன்பாடும் மேலும் அக்கவலையை அதிகரித்துள்ளதாக 32% பெண்கள் ஃபேஸ்புக் நடத்திய ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் உருவத் தோற்றம் குறித்த அச்சத்தையும் இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

20 வயதான எமிலி என்ற இளம்பெண் கூறும்போது, “இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதால் எனது உடல் அழகானதாக இல்லை என்று உணர்ந்தேன். நான் ஜிம்மிற்கு நிறைய சென்றிருந்தாலும், என் உடல் இன்ஸ்டாகிராமில் தாக்கத்தைச் செலுத்துபவர்களின் உடல்போல் இல்லை என்று வருந்தினேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in