

> காதலர் தினத்தை முன்னிட்டு அன்பின் வலிமையை உணர்த்தும் பொன்னான மேற்கோள்கள் உங்களுக்குத் தேவைப்படலாம். எனில் 'பிரைனி கோட்' இணையதளம் உங்களுக்கு ஏற்றது. பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களுக்கான தகவல் சுரங்கமாக அறியப்படும் இந்த இணையதளத்தில் காதலர் தினம் தொடர்பான மேற்கோள்கள் தனிப்பக்கத்தில் பட்டியிடப்பட்டுள்ளன- >http://www.brainyquote.com/quotes/topics/topic_valentinesday.html
கவிஞர் மாயா ஏஞ்சலோவில் தொடங்கி, ஷேக்ஸ்பிர்யர், பைரன் உள்ளிட்ட பலரது உருக வைக்கும் மேற்கோள்களை இதில் பார்க்கலாம்.
> காதலர் தினம் இப்போது அநேகமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் காதலர் தினம் எங்கிருந்து, எப்படி உருவானது எனத் தெரியுமா? வரலாற்றுத் தகவல்களுக்குப் பெயர் பெற்ற 'ஹிஸ்டரி.காம்' இணையதளம் இதற்கான விவரங்களை வீடியோ விளக்கமாக அளிக்கிறது: >http://www.history.com/topics/valentines-day/history-of-valentines-day/videos/bet-you-didnt-know-valentines-day#
தொடர்புடைய வீடீயோக்களாக சாக்லெட்டின் வரலாற்றையும், முத்தத்தின் விஞ்ஞானத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
> காதலர் தினம் என்றால் சாக்லெட்டும், கொண்டாட்டமும் தானா? கொஞ்சம் விளையாட்டும் இருந்தால் சுவையாக இருக்கும் என நினைத்தால், 'சுடோகுவாலன்டைன்' இணையதளம் (>http://www.sudokuvalentine.com/) காதலர் தின சுடோகு புதிர்களை அளிக்கிறது.
> வாழ்த்து அட்டைகள் இல்லாமல் காதலர் தினமா? அதற்கேற்ப, விதவிதமாக வாழ்த்து அட்டைகளை உருவாக்கித்தரும் இணையதளங்களும் இருக்கின்றன. 'திங்க்ஃபுல்' இணையதளம் கொஞ்சம் வித்தியாசமாக நீங்களே மின்னணு வாழ்த்து அட்டையை உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது. 'எச்.டி.எம்.எல்' உதவியுடன் வாழ்த்துத் தளமாகவும் தோன்றும் வாழ்த்து அட்டையை வடிவமைத்துக்கொள்ளலாம் என்கிறது இந்தத் தளம்:
> ஸ்மார்ட்போன் காலத்தில் காதலர் தினம் தொடர்பான தகவல்களை உள்ளங்கையில் அளிக்கிறது 'வாலன்டைன்ஸ் டே' எனும் சிறப்புச் செயலி. காதலர் தின வரலாற்றில் தொடங்கி, காதலர் தின கவிதைகள், காதல் ஜாதகம், காதல் மீட்டர் எனப் பல விஷயங்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆண்ட்ராய்டு செயலி: >https://play.google.com/store/apps/details?id=com.medoli.valentinesday
> காதலர் தினத்தைக் கொண்டாடுவது எல்லாம் இருக்கட்டும். இந்த தினம் பற்றிய விவரங்களைப் பாடமாக நடத்தி மாணவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா? 'ஸ்டோரிபோர்ட்தட்' இணையதளம் இதற்கான வழிகாட்டி பாடத்தை அளிக்கிறது: >http://www.storyboardthat.com/teacher-guide/valentines-day-activities