

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய ஜுக் பார் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ளூடூத் வசதியுடன் கூடிய இந்த ஸ்பீக்கரில் சினிமாவில் பார்ப்பது போன்ற ஒலி அனுபவத்தைப் பெற முடியும் என அந்நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது.
ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், ஏற்கன்வே சந்தையில் உள்ள அதன் சவுண்டு பார் ஸ்பீக்கரான ‘ஜுக் பாரில்’ ப்ளூடூத் அம்சத்தினைச் சேர்த்து அதனைப் புதுப்பித்துள்ளது. மேலும் ஒழுங்கற்ற முறையில் காணப்படும் ஒயர்களின் தேவையின்றி சரவுண்டு சவுண்டு கேட்கும் அம்சத்தையும் இதில் சேர்த்துள்ளது. இந்த சவுண்டு மான்ஸ்டர் பார் ஸ்பீக்கரை தொலைக்காட்சி, கைபேசி, டேபிலட் அல்லது கணினியில் என எதிலும் இணைத்துக் கொள்ளலாம்.
பென் டிரைவுகளுக்கான USB ஸ்லாட்டுகள், SD/MMC கார்டுகளுக்கான ஸ்லாட்டு, உள்ளேயே வடிவமைக்கப்பட்ட FM டியூனர் மற்றும் ஆக்ஸ்-இன் ஆகிய பல்வேறு வகையான இணைப்பு முறைகளைத் தேர்ந்தெடுக்கும் வசதியுடன் வருகிறது.
இதில் கீழ்நோக்கி ஒலியெழுப்பும் சப்-வூஃபர் மற்றும் பாரில் நடுத்தர/உயர்தர டிரைவர்களையும் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கரின் மொத்த அவுட்புட் 49 வாட்ஸ் RMS ஆகும். இந்த ஸ்பீக்கர் 40hz-20khz என்ற எல்லைக்குள் ஒலியை அளிக்க வல்லதாகும். ரிமோட் கண்ட்ரோல் வைத்தும் ஸ்பீக்கரை இயக்கலாம்.
இந்த ஸ்பீக்கர் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இதன் விலை ரூ. 5499.