

‘இயற்கை ஆர்வலர்களுக்கான நெட்பிளிக்ஸ்’ எனும் வர்ணனையோடு அறிமுகமாகி இருக்கிறது ‘லவ்நேச்சர்’ இணையச் சேவை. அதாவது இயற்கை ஆர்வலர்களுக்கான வீடியோக்களை ‘ஸ்ட்ரீமிங்’ முறையில் வழங்கும் இணையச் சேவை. இப்புவியின் இயற்கைச் செல்வங்களையும், வன உயிர்களின் அழகையும் படம் பிடித்துக்காட்டும் அருமையான ஆவணப் படங்களை ஸ்ட்ரீமிங் முறையில் பார்த்து ரசிக்க வழி செய்வதுதான் இதன் நோக்கம்.
ஸ்ட்ரீமிங் என்பதால் கட்டணச் சேவை என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் ஸ்மார்ட்போனில் தொடங்கி, ஸ்மார்ட் டிவி, டெஸ்க்டாப் என எந்தச் சாதனத்திலும் பார்க்க முடியும். ‘4 கே’ தரத்திலான வீடியோ என்பதோடு, வனவிலங்குகள் உலகிலிருந்து புதிது புதிதாகத் தேர்வு செய்து தர இருப்பதாக உறுதி அளிக்கிறது. எப்போதும் புதிதாக ஏதாவது இருந்துகொண்டே இருக்கும் என்றும் தெரிவிக்கிறது. உலகளாவிய அளவில் அறிமுகமாக இருக்கிறது. இந்தியச் சேவை தொடக்கம் பற்றி அறிய பதிவுசெய்துகொள்ளலாம்.
இயற்கை மற்றும் வனவிலங்கு மூலம் நாம் வாழும் புவியை அறிந்துகொள்ள உதவும் சேவை! இணையதள முகவரி: >http://video.lovenature.com/#homepage