வாகன உபகரணம்

வாகன உபகரணம்
Updated on
1 min read

வாகனங்களின் சக்கரங்கள் சேறுகளிலோ அல்லது மணல்களிலோ சிக்கிக்கொண்டால் வெளியே எடுப்பது மிக சிரமமானது. இதை எளிதாக்க ’டிரட் புரோ’ என்கிற உபகரணத்தை உருவாக்கியுள்ளனர் ஆஸ்திரேலியாவில் ஒரு நண்பர்கள் குழுவினர்.

சக்கரங்கள் சிக்கிகொண்டால் சக்கரத்துக்கு அடியில் இதனை சொருகிவிட்டு வாகனத்தை இயக்கினால் எளிதாக வாகனம் நகர்ந்து விடும்.

சக்கரத்தோடு பிடிமானம் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. டயர்களை சேதப்படுத்தாமல் பிடிமானம் கிடைக்கும் வகையில் உள்ள இந்த உபகரணம் எடை குறைவானதும், கையாள எளிதாகவும் இருக்கும் என்கிறது உருவாக்கியுள்ள குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in