ட்விட்டரில் வெள்ளை மாளிகையை முந்தினார் நரேந்திர மோடி

ட்விட்டரில் வெள்ளை மாளிகையை முந்தினார் நரேந்திர மோடி
Updated on
1 min read

அமெரிக்க வெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையே இதுவரை அதிகமாக இருந்து வந்தது. ஆனால், அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விஞ்சி விட்டார்.

பர்சன் மார்ஸ்டெல்லர் என்ற குளோபல் பப்ளிக் ரிலேஷன்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் தனது ஆய்வில் இதனைத் தெரிவித்துள்ளது.

மோடியைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 4,983,667 அமெரிக்க வெள்ளை மாளிகை ட்விடர் கணக்கை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 49,80,752.

2014 தேர்தல்களுக்குப் பிறகு மோடியின் புகழ் ட்விட்டரில் அதிகரித்துள்ளது. எனவேதான், துருக்கி அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி மோடி தற்போது 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ட்விட்டர் கணக்கில் யார் முன்னிலை என்பது ஒரு தேசத்தின் பெருமிதமாகவே பார்க்கப்படுவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in