முன்னேற்றம் காட்டும் கருவி

முன்னேற்றம் காட்டும் கருவி
Updated on
1 min read

நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள வழி செய்யும் எண்ணற்ற செய்தி செயலிகள் இருக்கின்றன. அப்படியே நாட்டில் நடைபெற்று வரும் முன்னேற்றப் பணிகளைப் பற்றியும் அறிந்து கொள்ள செயலிகள் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

அந்த வகையில் இந்திய அரசு சார்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு செயலி நாட்டில் நடைபெற்று வரும் கிராமப்புற மின்மயக்காலின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள வழி செய்கிறது.

ஊரக‌ மின்வசதிக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'கிராமீன் வித்யூதிகரன்' எனும் பெயரிலான இந்த செயலி, நாட்டில் இன்னமும் மின்மயமாக்கப்பட வேண்டிய கிராமங்களின் எண்ணிக்கை, அவற்றில் மின்மயமாக்கப்பட்டு வருபவை எவை போன்ற விவரங்களை அட்டவனையாக முன்வைக்கிறது.

மின்மயமாக்கல் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிய முடிவதோடு மாநில அளவிலான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.phonegap.kyrovidyut

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in