

கருத்துக் கணிப்புகளை ஆய்வு நிறுவனங்கள்தான் நடத்த வேண்டுமா என்ன? நீங்கள் நினைத்தாலும் கருத்துக் கணிப்புகளை நடத்த முடியும்தான். கேள்வி பதில் பாணியில் எளிதாக கருத்துக் கணிப்புகளை நடத்திக்கொள்ள வழி செய்யும் இணையதளங்கள் பல இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இந்தப் பட்டியலில் இப்போது 'ரிடில்' தளமும் சேர்ந்திருக்கிறது.
மிக எளிதாக இணையவாசிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய உள்ளட்டக்கத்தை உருவாக்கிக் கொள்ள வாருங்கள் என அழைப்பு விடுக்கும் இந்தத் தளம், கருத்துக் கணிப்புகள், வினாடி வினா மற்றும் உங்களுக்கான பட்டியல்களையும் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது.
இவ்வளவு ஏன், நீங்களே கூட ஆளுமை சோதனைக்கான கேள்விகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். வலைப்பதிவு மற்றும் சொந்தமாக இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் வாசகர்களுடன் மேலும் சிறந்த முறையில் தொடர்பு கொள்ள இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆசிரியர்களும் கூட மாணவர்கள் மத்தியில் சுவையான வினாடி வினாக்களை நடத்த பயன்படுத்திக்கொள்ளலாம்.
இணைய முகவரி: >http://www.riddle.com/welcome