செயலி புதிது: ஒலிப் படங்கள்

செயலி புதிது: ஒலிப் படங்கள்
Updated on
1 min read

ஒளிப்படப் பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் மூலம் புதிய ஒளிப்படங்களைப் பார்த்து ரசிக்கலாம். இந்தப் படங்கள் மூலம் புதிய இடங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறியலாம். சரி, இன்ஸ்டாகிராம் படங்கள் மூலம் புதிய இசையைக் கண்டறிய முடியுமா? ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்காக அறிமுகமாகியுள்ள ‘சவுண்ட்ஸ்' செயலி இதைத்தான் சாத்தியமாக்குகிறது.

இந்தச் செயலி மூலம் புதிய பாடல்களைக் கண்டறிந்து அவற்றை இன்ஸ்டாகிராம் ஒளிப்படங்களாகப் பகிர்ந்துகொள்ளலாம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் தவிர, ஸ்னேப்சாட், பேஸ்புக் மெஸ‌ஞ்சர் ஆகிய சேவைகள் வாயிலாகவும் பாடல்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

அடிப்படையில் இந்தச் சேவை புதிய இசையைக் கண்டறிவதற்கான சேவை.

மேலும் விவரங்களுக்கு: >https://www.sounds.am/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in