நீர் உறிஞ்சும் சாலை

நீர் உறிஞ்சும் சாலை
Updated on
2 min read

இங்கிலாந்தைச் சேர்ந்த டார்மாக் கட்டுமான நிறுவனம் புதிய வகையிலான டாப்மிக்ஸ் பெர்மிபல் என்கிற கான்கிரீட் கலவையை உருவாக்கியுள்ளது. தண்ணீரை உறிஞ்சும் வகையிலான இந்த கான்கிரீட் கலவையைக் கொண்டு சாலை அமைத்தால் சாலையில் தண்ணீர் தேங்கும் சிக்கல் இருக்காது. இந்த கான்கிரீட் தண்ணீரை உறிஞ்சி நிலத்தினுள் அனுப்பி விடுகிறது. மூன்று அடுக்கில் அமைக்கப்படும் இந்த வகை கான்கிரீட் சாலையால் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கலாம். இதை அமைக்க குறைந்த செலவே ஆகும் என்று கூறியுள்ளது அந்த நிறுவனம். அனைத்து இடங்களிலும் சாத்தியமில்லை என்றாலும் நடைபாதை, பார்க்கிங் பகுதிகள் மற்றும் தெருக்களில் இந்த கலவையைக் கொண்டு சாலை அமைக்கலாம் என்றும் யோசனை கூறியுள்ளது.

ஸ்மார்ட் சமையலறை

மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான மிலி (miele) நவீன சமையலறையை அறிமுகப்படுத்தியுள்ளது. முழுவதுமாக மின்னணு முறையில் இயங்கும் இந்த சாதனங்கள் உள் அலங்கார முறையில் கிட்டத்தட்ட ஒரு சுவர் போலவே காட்சி அளிக்கும். காபி வேண்டும் என்று பட்டனைத் தட்டினால் காபி தயாராகி, கோப்பையில் பிடிக்கபட்டு சமிக்கை கொடுக்கிறது. மைக்ரோவேவ்ஓவன், குளிர்சாதன பெட்டி, காபி இயந்திரம், இன்டெக்சன் ஸ்டவ், டிஷ் வாஷர் என எல்லா சாதனங்களும் ஒரே இடத்தில் அமைந்துவிடுவதால் வீட்டின் இடத்தையும் அடைத்துக் கொள்வதில்லை.

லேப்டாட் சார்ஜர்

உலகின் மிகச்சிறிய லேப்டாப் சார்ஜரை வெளியிட்டுள்ளது ஃபின்சிக்ஸ் என்கிற நிறுவனம். எடை குறைவு, நீளமான ஒயர்கள் கிடையாது. யுஎஸ்பி போர்ட் வசதியும் உள்ளது. 100-240 வோல்டேஜ் வரை சப்போர்ட் செய்யும்.

அட்ஜெஸ்ட் பெல்ட்

உடல் பருமனுக்கு ஏற்ப தானாகவே அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் பெல்ட் இது. எடை அதிகரிப்பு, குறைவு, நடை அளவு போன்றவற்றையும் ஆப்ஸ் வழியாக பதிவு செய்து விடும். இதற்கு `பெல்டி' (Belty) என்று பெயரிட்டுள்ளனர்.

ஸ்மார்ட் பூட்டு

இ-ஜி டச் என்கிற பூட்டு நிறுவனம் பயணப் பெட்டிகளுக்கான ஸ்மார்ட் பூட்டை வெளியிட்டுள்ளது. இந்த பூட்டுக்கு சாவிகளோ, ரகசிய குறியீட்டு எண்களோ கிடையாது. மொபைல் செயலி (ஆப்ஸ்) மூலம் மட்டுமே இதை இயக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in