அரை மணி நேரம் முடங்கியது ஃபேஸ்புக்

அரை மணி நேரம் முடங்கியது ஃபேஸ்புக்
Updated on
1 min read

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இன்று (வியாழக்கிழமை) சுமார் அரைமணி நேரங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முடங்கியது.

ஃபேஸ்புக் தளத்தில் சர்வர் முடங்கியதாக தெரிகிறது. எனினும், 'மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்' என்ற தகவலை மட்டும் ஃபேஸ்புக் வெளியிட்டது.

ஃபேஸ்புக் தளம் பிற்பகலில் முடங்கிய அடுத்த நொடிகளில், அதுகுறித்த தகவலை ட்விட்டரில் இணையவாசிகள் பகிர்ந்தவண்ணம் இருந்தனர்.

#facebookdown என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் உலக அளவிலும், இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் வலம்வரத் தொடங்கியது.

பின்னர், சுமார் அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக் வழக்கம்போல் இயக்கத் தொடங்கியது.

ஆசிய நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட உலக நாடுகள் முழுவதுமே இந்த முடக்கம் ஏற்பட்டது.

இதற்கு முன் இப்படி ஓர் அனுபவத்தை பெறவில்லை என்ற ரீதியில் ட்விட்டரில் ஃபேஸ்புக் பயனர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

உலக அளவில் இணையதளம் மட்டுமின்றி, ஆப்-களிலும் இந்த முடக்க பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 160 பில்லியன் டாலர் என்பது கவனத்துக்குரியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in