

அமெரிக்காவில் மட்டுமே விற்பனையாகி வந்த கூகுள் கிளாஸ் இப்போது முதல்முறையாக பிரிட்டனில் விற்பனைக்கு வந்துள்ளது. இங்கு கூகுள் கிளாஸ் சுமார் ரூ.1 லட்சத்துக்கு விற்பனையாகிறது. இது அமெரிக்காவில் விற்பனையானதை விட சுமார் ரூ.10 ஆயிரம் அதிகமாகும்.
அமெரிக்காவை அடுத்து பிரிட்டனில்தான் கூகுள் கிளாஸ் இரண்டாவதாக விற்பனைக்கு வந்துள்ளது. பிரிட்டனில் நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவோரிடம் கூகுள் கிளாஸ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இணைய வசதியுடன், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியது கூகுள் கிளாஸ். செல்போனிலும், லேப்டாப்பிலும் உள்ள வசதிகளையும் அதில் கிடைக்காத சில வசதிகளையும் மேம்படுத்தப்பட்ட வகையில் கூகுள் கிளாஸ் மூலம் பயன்படுத்த முடியும்.