கைகளே கீபோர்டு

கைகளே கீபோர்டு
Updated on
1 min read

கீபோர்டு மற்றும் மவுசுக்கு பதிலாக கையில் சில ஒயர்களை மாட்டிக் கொண்டு கம்ப்யூட்டரை இயக்கலாம். இப்படியான ஒரு கருவியை ஜெஸ்ட் என்கிற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஒயர்களைப் போல உள்ள இந்தக் கருவியை கையில் அணிந்து கொண்டு, கம்ப்யூட்டரின் மானிட்டரை பார்த்து கை அசைத்தால் மவுசாக இயக்கலாம். திரையில் தெரியும் கீ போர்டு எழுத்துகளை கையை அசைப்பதன் மூலமே டைப் செய்யலாம். மோஷன் பிராசசர் மூலம் இந்தக் கருவி செயல்படுகிறது.

போட்டோஷாப் மற்றும் 3டி வேலைகள் உட்பட பல வசதிகளை இந்த கருவி மூலம் மேற்கொள்ள முடியும்.

தானியங்கி கிளீனர்

வீட்டை பெருக்க சுத்தம் செய்யும் வேலைகளை எளிதாக செய்ய வேக்குவம் கிளீனர் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த இயந்திரத்தை இயக்கவும் ஒரு ஆள் தேவையாகத்தான் இருக்கிறது.

தற்போது இதையும் எளிமையாக்கியுள்ளது ஐரோபாட் என்கிற கருவி. மொபைல் ஆப்ஸ் மூலம் இயக்கப்படும் இந்த கருவி தானாகவே அறையை சுத்தம் செய்கிறது.

360 டிகிரி சுழலும் இந்த கருவியிலுள்ள சென்சார்கள் வீட்டின் வளைவுகளுக்கு ஏற்ப சுற்றி வருகிறது. எத்தனை மணிக்கு சுத்தம் செய்ய வேண்டும் என ஆப்ஸில் பதிவு செய்து விட்டால் தானாகவே சுத்தம் செய்துவிட்டு அதற்குரிய இடத்தில் செட்டில் ஆகிவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in