

சுற்றுச் சூழலை காக்கும் வகையில் பேட்டரி கார்களுக்கு முன்னுரிமை தரும் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பேட்டரி கார்களைப் பயன்படுத்துவோர் அவற்றை சார்ஜ் ஏற்ற வீடுகள் அல்லது அதற்குரிய இடங்களைத் தேடி சார்ஜ் ஏற்ற வேண்டியுள்ளது.
பேட்டரி கார்களில் பயணிப்போர், பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கென்று நிறுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த சாலையில் செல்லும்போதே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.
சாலையின் கீழே போடப்பட்டுள்ள கேபிள்கள் மின் காந்த அலைகளை உருவாக்கும். இதன் வழியாக பயணிக்கும் பேட்டரி கார்கள் மின்காந்த அலைகள் மூலம் பேட்டரியை சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்.
மிதக்கும் நகரம்
கடலில் மிதக்கும் நகரத்தை பிரான்ஸைச் சேர்ந்த ஜாக்குஸ் ரோகெரி வடிவமைத்துள்ளார். பிரம்மாண்டமான விமானத்தைப் போன்ற தோற்றத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் 7 ஆயிரம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய முடியும். கடல் குறித்து ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்றது இந்த மிதக்கும் நகரம். அதுமட்டுமல்ல கடல் மீது ஆர்வம் உள்ளவர்களும் இங்கு வந்து செல்லலாம். 3 ஆயிரம் அடி பரப்பிலான இந்த நகருக்கு தேவையான மின்சாரத்தை கடலிலிருந்தே பெற்றுக் கொள்ளும்.
இதன் அடிப்பாகம் 100 மீட்டர் ஆழம் வரை செல்லும்.