மொபைல் புதுசு: ஐ போன் 6

மொபைல் புதுசு: ஐ போன் 6
Updated on
1 min read

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களை உலகமெங்கும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைவிட ஆப்பிளின் ஐபோன் அந்தஸ்தின் அடையாளம். இவை அமெரிக்காவில் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் கடந்த 16-ம் தேதி ஆப்பிள் ஐபோனின் 6 எஸ் மாடலும் 6 எஸ் ப்ளஸ் மாடலும் அறிமுகமாகியுள்ளன. ஐபோன் 6 எஸ், 16 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி ஆகிய வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை முறையே 62 ஆயிரம், 72 ஆயிரம், 82 ஆயிரம்.

இதேபோல் 6 எஸ் ப்ளஸ் மாடலும் 16 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி ஆகிய வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை முறையே 72 ஆயிரம், 82 ஆயிரம், 92 ஆயிரம்.

விலை அதிகம் என்றாலும் ஆப்பிள் பிரியர்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. வரிசையில் காத்துக் கிடந்து ஐபோன் ரகங்களை வாங்கிச் செல்கிறார்கள்.

டிஸ்ப்ளே:

ஐபோன் 6 எஸ், 4.7 அங்குல ரெடினா டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.3 மி.மீ.

6 எஸ் ப்ளஸ் மாடல் 5.5 அங்குல ரெடினா டிஸ்ப்ளேயுடனும் 3 டி தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் தடிமன் 7.1 மி.மீ.

செக்யூரிட்டி:

விரல் ரேகை சென்சார் உதவியுடன் போனின் டிஸ்ப்ளேயைப் பூட்டிவைத்துக்கொள்ளவே திறந்துகொள்ளவோ முடியும். ஆகவே அதிகபட்ச பாதுகாப்பு கொண்டது.

நிறம்:

இந்த இரண்டு போன்களும் சில்வர், கோல்டு, ஸ்பேஸ் க்ரே, ரோஸ் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

எடை:

6 எஸ் 143 கிராம் எடையும் 6 எஸ் ப்ளஸ் 192 கிராம் எடையும் கொண்டவை.

கேமரா:

12 எம்பி பின்பக்க கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டவை.

பேட்டரி:

3ஜியில் 6 எஸ் மாடலில் 14 மணி நேரமும், 6 எஸ் ப்ளஸ் மாடலில் 24 மணி நேரமும் பேசும் அளவுக்கு சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இதில் உண்டு. இந்த வகை போன்களில் நானோ வகை சிம்கள் தான் செயல்படும். ஐஓஎஸ் 9 இயங்கு தளத்தில் இவை செயல்படுகிறன.

கூடுதல் விவரங்களுக்கு: >http://www.apple.com/in/iphone-6s/specs/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in