ஸ்மார்ட் ஸ்கூட்டர்

ஸ்மார்ட் ஸ்கூட்டர்
Updated on
1 min read

பரபரப்பான சாலையில் நடந்து செல்வதற்கு பதிலாக இந்த சிறிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தலாம். 250 வாட் மோட்டாரில் இது இயங்குகிறது. ஆப்ஸ் மூலம் இந்த ஸ்கூட்டரை கண்காணிக்கவும் முடியும்.

எலெக்ட்ரிக் யமஹா

யமஹா நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் PES1, PED1 என்கிற இரண்டு மாடல்களில் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. சமீபத்தில் டோக்கியோவில் நடந்த வாகன கண்காட்சியில் இதன் வடிவமைப்பு வெளியானது.

நிப்பர் சார்ஜர்

உலகின் மிகச் சிறிய சார்ஜரை நிப்பர் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. கீ செயின் போல இருக்கும் இந்த சிறிய கருவியில் பேட்டரியை இணைத்தால் சார்ஜர் ரெடி. இதன் அளவு 17x17x17 மி.மீட்டர்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in