

‘ட்ரு டயலர்' செயலி இனி உங்கள் தனிப்பட்ட உதவியாளர் போலவும் செயல்படவுள்ளது. ட்ரு டயலரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியை இந்தச் செயலியின் பின்னே உள்ள ‘ட்ரு காலர்' இப்படி குறிப்பிடுகிறது.
முக்கிய வேலை அல்லது ஆலோசனைக் கூட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும்போது அந்தத் தகவலைப் பயனாளிகள், மற்றவர்களுக்கு எளிதாகத் தெரிவிக்க முடியும். இதற்காக நான் பிஸியாக இருக்கிறேன் எனும் வாய்ப்பைத் தேர்வு செய்து அமைத்துக்கொண்டால் போதும், மற்றவர்கள் அழைக்கும்போது, சிவப்புப் புள்ளி மூலம் அவர் அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருப்பது உணர்த்தப்படும்.
மாறாக அழைப்பை ஏற்கும் நிலையில் இருந்தால் பச்சைப் புள்ளி வரவேற்கும். ஆக, ஒருவரை அழைப்பதற்கு முன்னரே அவர் பிஸியாக இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இந்த வசதியைப் பயனாளிகள் காலண்டருடன் இணைத்துக்கொள்ளவும் செய்யலாம். ஆண்ட்ராய்டு போன்களில் இது அறிமுகமாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: >https://www.truecaller.com/