மொபைல் புதுசு: கேமரா பிரியர்களுக்கான புதிய ஸ்மார்ட் போன்

மொபைல் புதுசு: கேமரா பிரியர்களுக்கான புதிய ஸ்மார்ட் போன்
Updated on
1 min read

கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் சகட்டுமேனிக்கு ஒளிப்படம் எடுப்பவரா நீங்கள்? அப்படியானால் லெனோவா உங்களுக்கான ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவாவைப் ஷாட் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த மொபைல் இப்போதைக்கு இந்நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது. இன்னும் இரு வாரங்களில் அனைத்து ஸ்டோர்களிலும் இந்த மொபைலை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

இரட்டை சிம் வசதி கொண்ட இந்த போனில் உள்ள 16 மெகா பிக்ஸல் கேமராதான் இதன் சிறப்பம்சம். இந்த கேமரா, ஆறு துண்டுகளாலான லென்ஸ், பிசிஐ சென்ஸார், மூன்று நிற எல்இடி ப்ளாஷ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த கேமரா மூலம் வெளிச்சம் குறைந்த இடங்களிலும் நல்ல ஒளிப்படத்தை எடுக்க முடியும். ஆகவே உள்ளறைகளிலும் இரவுகளிலும்கூட தெளிவான படமெடுக்க இது உதவும் என்கிறார்கள். மேலும் இதிலுள்ள இன்ஃப்ராரெட் ஆட்டோ ஃபோகஸ் வசதி மூலம் துல்லியமான படங்களை எடுக்க முடியும் என்கிறது இந்நிறுவனம். க்ரிம்சன், பேர்ல் ஒயிட், க்ராஃபைட் க்ரே ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. 4ஜி. வைஃபை, புளுடூத் போன்ற வசதிகளும் உள்ளன.

இதர அம்சங்கள்:

திரை: 5 அங்குலம் எச்டி

இயங்கு தளம்: ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்

ராம்: 3 ஜி.பி.

சேமிப்புத் திறன்: 32 ஜி.பி.

பின்பக்க கேமரா: 16 மெகா பிக்ஸல்

முன்பக்க கேமரா: 8 மெகா பிக்ஸல்

பேட்டரி: 2900 எம்ஏஎச்

எடை: 145 கிராம்

விலை ரூ: 25,499.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in