

புதிதாக அறிமுகமாகும் ஆயிரக்கணக்கான செயலிகளில் நீங்கள் அடுத்ததாகப் பயன்படுத்தக்கூடிய செயலியைக் கண்டறிய உதவுகிறது டெக்ஸ்ட்மீஆப்ஸ் செயலி. எப்படித் தெரியுமா?
தினம் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட செயலியை அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுகத்தை எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பி வைக்கிறது. நாள் ஒன்றுக்கு ஒரு செயலிதான், அதற்கு மேல் வராது!
ஆனால் ஒன்று, எல்லாமே ஐ.ஒ.எஸ் செயலிகள். இன்னொன்று குறுஞ்செய்தி வடிவில் தகவல் வருவதால் அதற்கான கட்டணம் பொருந்தி வரலாம். ஆனால் செயலிகள் அறிமுகம் செய்து கொள்வதில் எளிமையான, புதுமையான அணுகுமுறை!
மேலும் விவரங்களுக்கு: >http://www.textmeapps.com