Published : 10 Oct 2020 07:05 PM
Last Updated : 10 Oct 2020 07:05 PM

நேரடிச் செய்தி, ரீட்வீட்டுகளில் புதிய அம்சம்: ட்விட்டர் திட்டம்

நேரடி இன்பாக்ஸ் செய்தி, ரீட்வீட்டுகளில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் ஒரு பயனருக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமெனில் அவருக்கு ரிக்வெஸ்ட் அனுப்ப வேண்டும். அதை அவர் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். இல்லையெனில் ரிப்போர்ட் அல்லது பிளாக் செய்ய முடியும்.

இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யாவிட்டால், அந்தச் செய்தி படிக்கப்பட்டதா இல்லையா என்பதைக் குறுஞ்செய்தி அனுப்பிய பயனரால் அறிந்துகொள்ள முடியாது. அத்துடன் குறுஞ்செய்தி அழைப்பை ஏற்றுக்கொண்ட பட்டியலில் இருந்து, இந்த அழைப்புகள் தனியாகப் பிரிக்கப்பட்டு இருக்கும்.

ட்விட்டர் அறிமுகம் செய்ய உள்ள புதிய வசதியில், தேவையில்லாத உணரும் செய்தி அழைப்புகளைப் பயனர்கள் ம்யூட் செய்ய முடியும். இதன் மூலம் எந்தப் பயனரையும் ப்ளாக் செய்ய வேண்டியதில்லை.

ரீட்வீட் வசதி

தற்போது ட்விட்டரில் உள்ள ரீட்வீட் வசதியில் Retweet, Quote Retweet வசதி உள்ளது. இதில் செய்தியை அப்படியே பகிர Retweet பகிர்வையும், நம்முடைய கருத்துடன் பகிர Quote Retweet-ஐயும் பயன்படுத்தி வருகின்றனர். இனி வரவுள்ள அம்சத்தில், Retweet தெரிவைத் தேர்ந்தெடுத்தால் மேலே ஓர் இடம் தோன்றும். அதில் தேவைப்பட்டால் எதையாவது எழுதிப் பகிரலாம். அல்லது வெறுமனே ரீட்வீட் செய்யலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x