

நமக்கு நாமே திட்டம் போல, நமக்கு நாமே இமெயில் அனுப்பிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? முக்கிய விஷயங்களை மறக்காமல் இருக்க நினைவூட்டல் சேவையாகவும், குறிப்புகளை அனுப்பவும் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இமெயில் மீ செயலி இந்த வசதியை அளிக்கிறது.
இந்தச் செயலி மூலம் ஒருவர் தான் விரும்பும் இமெயில் முகவரிக்குக் குறிப்புகளை அனுப்பிவைக்கலாம். செயலியில் ஒரு தட்டு தட்டினால், மெயில் அனுப்புவதற்கான கட்டம் எட்டிப் பார்க்கிறது.
அதில் குறிப்பு அல்லது நினைவூட்டல் செய்தியை டைப் செய்து நம்முடைய மெயில் முகவரிக்கு அனுப்பிக்கொள்ளலாம். வேறு பலவிதங்களிலும் அனுப்பிவைக்கும் வசதி இருக்கிறது. பயனுள்ள சேவை. ஆனால் கட்டணம் உண்டு.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://goo.gl/MZ0xdG