Published : 14 Sep 2015 03:41 PM
Last Updated : 14 Sep 2015 03:41 PM

ப்ளூடூத், வயர்லெஸ் மைக்குடன் ஜீப்ரானிக்ஸின் புதிய ஸ்பீக்கர்கள் அறிமுகம்

ஜீப்ரானிக்ஸ் ப்ளூடூத் வசதியுடன் கூடிய புதிய டவர் ஸ்பீக்கரை (ZEB-BTM-7450RUCF) அறிமுகப்படுத்தியுள்ளது. த்துடன்

2.0 சானல் டவர் ஸ்பீக்கரான இதில் பெண்டிரைவ் மற்றும் SD/MMC கார்டுகள் வழியாகவும் பாடல்கள் கேட்க முடியும். ப்ளூடூத் வசதியும் உள்ளது. மேலும் இதில் உள்ளேயே பொருத்தப்பட்ட FM ரேடியோ வசதி கொண்டுள்ளது. இதை தொலைக்காட்சி, டிவிடி ப்ளேயர், மொபைல் ஃபோன்கள், டேப்லட்டுகள் உள்ளிட்ட சாதனங்களுடனும் இணைக்க முடியும்.

கரோகே பாடுவதற்கு மைக்ரோபோன் வசதியுடன், ஒரு வயர்லெஸ் மைக்கும் தரப்படுள்ளது. இதோடு அனைத்து செயல்பாடுகளையும் கொண்ட ரிமோட் கன்ட்ரோலரும் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் 50 வாட்கள் RMS அவுட்புட் பவருடன் கூடியவை.

மரத் தோற்றத்துடன் வரும் இந்த ஸ்பீக்கரின் முன்புற தோற்றம் வழவழப்பான கறுப்பு நிறத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு டவரிலும் இரண்டு டிரைவர்கள் உள்ளன. ஒரு 3” டிரைவர் அதிக அலைவரிசைகளுக்காக மற்றும் 6.5” டிரைவர் குறைந்த லைவரிசைகளுக்காக. ஸ்பீக்கரின் அலைவரிசை பகுதி 40hz முதல் 20khz வரை ஆகும்.

ZEB-BTM7450RUCF சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஆன்லைன் கடைகளில் கிடைக்கிறது. இது ஜீப்ரானிக்ஸின் ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. ஸ்பீக்கரின் விலை ரூபாய் 6300/-.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x