

இன்டெக்ஸ் நிறுவனம் அகுவா வி5 என்னும் மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. 3ஜி வசதி கொண்ட இதன் விலை ரூ. 2,825. இது எப்போது சந்தைக்கு வரும் என்ற விவரத்தை இதுவரை இன்டெக்ஸ் நிறுவனம் இன்னும் முறையாக அறிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம் வசதியைக் கொண்டிருக்கும். கறுப்பு, வெள்ளை, சாம்பல் ஆகிய நிறங்களில் இது கிடைக்கும்.
இதன் பிற அம்சங்கள்:
திரை: 3.5 அங்குலம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்
ராம்: 256 எம்.பி.
சேமிப்புத் திறன்: 512 எம்.பி.
பின்பக்க கேமரா: 2 மெகா பிக்ஸல்
முன்பக்க கேமரா: 0.3 மெகா பிக்ஸல்
பேட்டரி: 1100 எம்ஏஎச்
எடை: 100 கிராம்
அழைக்கும் வசதி கொண்ட 3ஜி டேப்லெட்
ஸ்வைப் டெக்னாலஜிஸ் நிறுவனம் 3ஜி வசதி கொண்ட புதிய டேப்லெட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த டேப்லெட் பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் விற்கப்படும் எனத் தெரிகிறது. இதன் விலை ரூ. 7,299.
இரண்டு சிம்களைக் கொண்ட இந்த டேப்லெட்டின் ஒரு சிம் வழக்கமான ஜிஎஸ்எம், மற்றொன்று மைக்ரோ சிம். இந்த டேப்லெட், மொபைல் போன் போல பிறரை அழைத்துப் பேசும் வசதியைக் கொண்டிருக்கிறது. வைஃபை, ப்ளுடூத் போன்ற வசதிகளும் உள்ளன.
இதன் பிற அம்சங்கள்:
திரை: 6.95 அங்குலம்
ராம்: 1 ஜி.பி.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்
சேமிப்புத் திறன்: 16 ஜி.பி. (32 ஜி.பி. வரை அதிகரித்துக்கொள்ளலாம்)
முன்பக்க கேமரா: 2 மெகா பிக்ஸல்
பின்பக்க கேமரா: 5 மெகா பிக்ஸல்
பேட்டரி: 2800 எம்ஏஎச்
- தொகுப்பு: ரிஷி